அணுகல்தன்மை ஆதரவு: விசைப்பலகை குறுக்குவழிகள்

ஒவ்வொரு செயலுக்குமான விரைவான விசைப்பலகை குறுக்குவழிகளைக் கொண்டு iECHO-இல் உலாவுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

iECHO விசையப்பலகையை மட்டுமே பயன்படுத்தி அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தளத்தில் உள்ள பல்வேறு கூறுகளைப் பயனர்கள் திறம்பட வழிநடத்தவும் தொடர்பு கொள்ளவும் உதவும் விசையப்பலகைக் குறுக்குவழிகள் பற்றிய மேலோட்டத்தை இந்த வழிகாட்டி வழங்குகிறது.

ஊடாடும் கூறுகளுக்குச் செல்லுதல்

  • Tab – ஊடாடும் கூறுகளின் வழியே முன்னோக்கிச் செல்ல.
  • Shift + Tab – ஊடாடும் கூறுகளின் வழியே பின்னோக்கிச் செல்ல.

கூறுகளுடன் செயல்படுதல்

இணைப்புகள்

  • Enter – இணைப்பைச் செயல்படுத்த.

பொத்தான்கள்

  • Enter அல்லது Spacebar – பொத்தானைச் செயல்படுத்த.

சரிபார்ப்புப் பெட்டிகள்

  • Spacebar – சரிபார்ப்புப் பெட்டியைத் தேர்ந்தெடுக்க/நீக்க.

ரேடியோ பொத்தான்கள்

  • Spacebar – கவனத்திலுள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க (தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்).
  • ↑ / ↓ அல்லது ← / → – ரேடியோ பொத்தான் விருப்பங்களுக்கு இடையே செல்ல.
  • Tab – ரேடியோ பொத்தான் குழுவிலிருந்து வெளியேற.

தேர்வுப் (கீழ்தோன்றும்) மெனுக்கள்

  • ↑ / ↓ – விருப்பங்களுக்கு இடையே செல்ல.
  • Spacebar – கீழ்தோன்றும் மெனுவை விரிக்க.
  • Enter / Esc – ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து மெனுவைச் சுருக்க.

தானாகப் பூர்த்தியாகும் புலங்கள்

  • விருப்பங்களை வடிகட்ட தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
  • ↑ / ↓ – வடிகட்டப்பட்ட விருப்பங்கள் இடையே உலாவவும்.
  • Enter – ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உரையாடல்கள் (மாடல்கள் & பாப்-அப்கள்)

  • Esc – உரையாடலை மூடவும்.

ஸ்லைடர்கள்

  • ↑ / ↓ or ← / → – ஸ்லைடர் மதிப்பை அதிகரிக்க அல்லது குறைக்க.
  • Home / End – தொடக்கத்திற்கு அல்லது முடிவிற்குச் செல்ல.
  • Tab / Shift + Tab – இரட்டை முனை ஸ்லைடர்களின் முனைகளுக்கு இடையே மாற.
  • PageUp / PageDown – பெரிய அளவுகளில் சரிசெய்ய (எ.கா., 10%).

மெனு பார்கள்

  • ↑ / ↓ – மெனு விருப்பங்களுக்கு இடையே நகர.
  • Enter – மெனுவை விரிவுபடுத்தி (பொருந்தினால்) மற்றும் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ← / → – துணை மெனுக்களை விரிவுபடுத்த/சுருக்க.

டேப் பேனல்கள்

  • Tab – டேப் குழுக்களுக்குள் செல்லவும் வெளியேறவும்.
  • ↑ / ↓ or ← / → – டேப்புகளுக்கு இடையே நகர மற்றும் அவற்றைச் செயல்படுத்த.

‘ட்ரீ’ மெனுக்கள்

  • ↑ / ↓ – மெனு விருப்பங்களுக்கு இடையே நகர.
  • ← / → – துணை மெனுக்களை விரிவுபடுத்த/சுருக்க மற்றும் படிநிலை நிலைகளில் உலாவ.

திரை நகர்த்தல்

  • ↑ / ↓ – செங்குத்தாக திரை நகர்த்த.
  • ← / → – கிடைமட்டமாக திரை நகர்த்த.
  • Spacebar / Shift + Spacebar – பக்கவாரியாக திரை நகர்த்த.